ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம் மீண்டும் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
ஏப்ரல் 21 பிறகு ஏற்பட்ட நெருக்கு வாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்பதற்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.
நாட்டில் சுமுகமான நிலை தோன்றிய நிலையில் கபீர் ஹஸீம்,ஹலீம்,ரவுப் ஹக்கிம்,ரிஷாட் பதீயுதீன், அமிரலி, அப்துல்லா மஃறுாப் ஆகியோர் அமைச்சுப்பதவிகளை மீண்டும் கையேற்றனர்..
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் வாக்குறுதியின் பிற்பாடு மீண்டும் சுகாதார இராஜாங்க அமைச்சராக பைஸல் காசீம் எதிர்வரும் திங்கட் கிழமை பதவியேற்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

