நாடுமுழுவதும் இந்த மாதத்திற்குள் கொண்டு வரப்படவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலைத்திட்டம் போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இவ்வாறான சாரதிகளை அடையாளம் காண நவீன தொழிநுட்பத்துடனான சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேருந்து சாரதிகளை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

