Ads Area

காஷ்மீர்-‘நள்ளிரவில் சிறுவர்கள் கைது’! -‘மானபங்கம் படுத்தபடும் பெண்கள்.

தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து மாநிலத்தை பிளவுபடுத்திய பின்னர் காஷ்மீரின் உண்மை நிலவரம் கண்டறிய கடந்த ஆகஸ்ட் 7 முதல் 13 வரை5 நாட்களுக்கு காஷ்மீரில் முகாமிட்டிருந்தனர்.

கீழுள்ள ஆக்கம் பிரபல ஆங்கில நாளிதழான ஹஃ ப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானது.கீழுள்ள செய்தி கவிதா கிருஷ்னன் மற்றும் நிருபருக்கு மத்தியில் நடந்த உரையாடலாகும் .

அவர் அங்கு கண்ட காட்சிகளை  ..

“காஷ்மீர் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக் அல்லது பாலஸ்தீன பகுதியை போன்று காட்சி அளித்தது” என்று வர்ணித்துள்ளார்.

அங்கு நீங்கள் கண்டதை வர்ணியுங்கள் ?

காஷ்மீரில் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது . ராணுவ முற்றுகையின் கீழ் மக்கள் உள்ளனர். காஷ்மீரின் ஒவ்வொரு தெருக்களிலும், வீடுகளிலும் அனைத்து பகுதிகளிலும் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.  யாரும் கருத்து சொல்லவோ , அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கோ எந்தவிதமான அனுமதியும் இல்லை.

பெருநாள் அன்றைய தினத்தில் காஷ்மீர் முற்றிலும் உயிரற்று காணப்பட்டது. சின்னஞ்சிறு சிறுவர்களைத் தவிர வேறு எவரும் புத்தாடை அணிந்து இருக்கவில்லை. மக்கள் கிராமப்புறத்தில் உள்ள தங்கள் பள்ளிவாசல்களுக்கு கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை. பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் இருந்தும் மக்கள் தங்களின் வீடுகளிலேயே தொழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்கின்றார்கள். தங்களுக்கு உதவுவதற்கு எவருமில்லை என்று பெரும் விரக்தியில் உள்ளனர்.

முழு காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் ஒருவர் கூட மோடி அரசாங்கத்தின் முடிவை மகிழ்ச்சியாக ஏற்று கொண்டதாக தெரியவில்லை . காஷ்மீரில் தற்போது உள்ள சூழலை குறித்து இந்திய ஊடகத்தின் சித்தரிப்பு மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர். 

“அனைவரும் காஷ்மீருக்கு ஒரு மிகப்பெரிய நன்மை நடந்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால் இது யாருடைய திருமணம்? அதை யார் கொண்டாடுகிறார்கள்?  எங்களின் திருமணம் என்றால் எங்களிடம் தான் மகிழ்ச்சியாக உள்ளோமா ? என்று கேட்கப்பட வேண்டும். அது எப்படி ..?

ஒருவரும் எங்களிடம் நாங்கள் இதை குறித்து எப்படி உணர்கிறோம் என்று கேட்க முன்வருவதில்லை?”  என்று மக்கள்கேட்கின்றனர் . காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கதை தங்களுக்கு எதிரான ஒரு வன்முறையாகவும் அவமானமாகவும் பார்க்கின்றனர்.

அங்குள்ள ஊரடங்கு உத்தரவை பற்றி..? 

அங்கு மிகவும் கொடுமையான முறையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தங்கியிருந்த  ஸ்ரீநகர் ராஜ்பாக் வீதியிலும்..  ஈது பெருநாள் அன்றும் கூட ஊரடங்கு உத்தரவு முழு அமலில் கடுமையான முறையில் காணப்பட்டது. காஷ்மீர் மக்கள் இதை தங்களுக்கு எதிரான ஒரு தாக்குதலாகவும் , ஆக்கிரமிப்பாகவும் உணர்கிறார்கள்.

அங்குள்ள காஷ்மீர் பண்டிட்டுகளிடம் பேசினீர்களா? 

ஆம் . அங்கு பல காஷ்மீரி பண்டிட்ககளிடம் பேசினோம். இது குறித்த காணொளி ஆவணமும் எங்களிடம் உள்ளது. அதில் பேசிய ஒரு காஷ்மீரி பண்டிட் ” காஷ்மீரியத்”  என்பது உணரப்பட கூடிய ஒன்றாகும். ஈது பெருநாள் எங்கள் அனைவரின் பண்டிகை. மிக விரைவில் எங்கள் பண்டிகை நேரம் வரும்” என்று  கூறினார்.


சமீபத்தில் பிபிசி கஷ்மீர் மக்கள் நடத்திய மிகப் பெரும் போராட்டம் குறித்த வீடியோவை மோடி அரசாங்கம் மறுத்துள்ளதே ? அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் மட்டுமே போராட்டம்  நடந்ததாகவும், காஷ்மீரில் முழு அமைதி நிலவி வருவதாக தெரிவித்துள்ளதே ? 

ஆம் உண்மைதான் . போராட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் நடந்து வருகிறது. ஏனெனில் போராட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.  ஆனால் ஸ்ரீநகரில் உள்ள சௌரா என்ற பகுதியில் மிகப்பெரிய ஒரு போராட்டம் நடந்தது உண்மைதான். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி சரியானதுதான். எந்தவித போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் வீதியோரம் நின்றிருந்தும் பெள்ளட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களை சந்தித்தோம். அவர்களில் சில சிறுவர்களையும் சந்தித்தோம். மக்களின் கண்களை குருடாக்கி வாயை மூடி விட்டு அங்கு எந்த வித போராட்டமும் நடைபெறவில்லை என்று கூறி கடந்து சென்று விட முடியாது.

காஷ்மீரில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று இருந்தோம். அங்கு பல சிறுவர்களை போலீசார்  கடத்தி (abducted) சென்றுள்ளனர் ! இதை வேறு எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நடு இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று சட்டவிரோதமாக இராணுவ முகாம் பகுதிகளிலோ அல்லது காவல் நிலையங்களிலோ அடைத்து வைத்துள்ளனர். அங்கு அவர்கள் தாக்க படுகின்றார்கள்.

வீட்டிலிருந்து அழைத்து செல்லப்பட்ட சிறுவர்கள் மீண்டும் வீடு திரும்புவார்களா  அல்லது அப்படியே காணாமல் போய் விடுவார்களா என்பதை அறிந்துகொள்ள பெற்றோர்களுக்கு ஒரு வழியும் இல்லை. முதல் தகவல் அறிக்கையோ வேறு எந்த ஒரு வழக்கோ பதிய படுவதும் கிடையாது.நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களிலும் இவ்வாறு பலர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை கைது  செய்யப்பட்டதாக கூறுகிறீர்கள்?


ஒரு சிறுவன் மட்டுமில்லை. நாங்கள்  கைது செய்யப்பட்ட 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை சந்தித்தோம்.அச்சிறுவன் தன்னை விட சிறு வயதில் உள்ள பலர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவித்தான் !.

சின்னஞ்சிறு சிறார்களை எல்லாம் எதற்கு  கைது செய்யவேண்டும்.?
மக்களை மிரட்டி வைக்க தான் . கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்.. சிறுவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில்… வீடுகளிலில் தங்கள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது .. என இப்படி பட்ட வேலைகளில் எங்கள் பிள்ளைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யார் மீதும் கற்களை எரிந்திடவும் இல்லை.இவ்வாறான கைது நடவடிக்கைகள் அங்குள்ள பெண்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்குகிறது.

ஒரு சில பெண்கள் காதை கடிக்கும் விதத்தில்.. இவ்வாறான திடீர் இரவு சோதனைகளின் போது தங்களை மானபங்கம்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களிலும் இதுதான் நிலை.

என் கேள்வி என்னவென்றால் .. இந்த இந்திய மீடியாக்கள் என்ன செய்கின்றன? ஏன் இங்கு வந்து இங்குள்ள நிலைகளை செய்தியாக வெளியிடுவது இல்லை?  எங்களால் இப்பகுதிகளை வந்தடைய முடிந்துள்ளதே !

இது மிகவும் கடுமையான செய்தி! இப்படிபட்ட குற்றச்சாட்டிற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

ஆம். எங்களிடம் குடும்ப உறுப்பினர்களின் வீடியோ பதிவை ஆவண படுத்தி வைத்துள்ளோம் அதில் முந்தய நாள் விடுவிக்கப்ட்ட சிறுவன் ஒருவனின் செய்தியும் காணொளி யாக உள்ளது ..

இங்கு கூறப்பட்ட, கூறப்படவிருக்கும் செய்திகள் கண்களை ஈரமாக்காமல் இருக்காது.எனினும் நாம் அறிந்தவரை இத்துணை முக்கிய செய்தியாக இருந்தும் இதை எந்த ஒரு பெரிய ஊடகமும் பெட்டி செய்தியாக கூட பிரசுரிக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாகும் .

சற்று விரிவாக சொல்ல முடியுமா ?

இரண்டு விஷயங்களை சொல்கிறேன். .

ஒரு வீடியோ 11 வயது சிறுவனுடையது. கைது செய்யப்பட்டிருந்த அவர் பெருநாளிற்கு ஒரு நாள் முன்பு தான் விடுவிக்கப்பட்டார். அச்சிறுவன் தன்னை விட சிரியவர்களை கூட அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார்.


மற்றொன்று… ஒரு காஷ்மீரி குடும்பத்தை கொண்ட வீடியோ. அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதால், அவர்களை நாங்கள் அடையாளப்படுத்தவில்லை.அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு வாலிபரை நடுநிசியில் சட்ட விரோதமாக கைது செய்து சென்றுள்னர். இதை தொடர்ந்து குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்றனர். ‘ஆனால் எங்கள் கைகளில் ஒன்றுமில்லை’ என்று கூறி போலீசார் கை விரித்து விடுகின்றனர். வாலிபர் கைது செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ ஆதாரம்/ ஆவணம் அவர்களிடம் இல்லை. நாளை அந்த வாலிபருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அல்லது திரும்ப வராமல் இருந்தாலும் நம்மிடம் அதை குறித்து கேட்க எந்த ஆதாரமும் இல்லை. இப்படி பேசும் குடும்பத்தினரின் வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.

நீங்கள் சொல்லும் இந்த கைது நடவடிக்கை போலீசாரால் நடக்கிறதா? அல்லது சி.ஆர்.பி.எஃப் வினராலா ? 

எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இதில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் என இரு தரப்பினரும் உள்ளனர் . இதுகுறித்து  தட்டி கேட்க நாங்கள் காவல் நிலையங்களுக்கு செல்லாததற்கு காரணம் மக்கள் எங்களிடத்தில் அங்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொண்டதுதான். இது சம்பந்தமாக அவர்கள் இரண்டு மனநிலைகளில் உள்ளனர். யாரேனும் தங்களுக்கு உதவ மாட்டார்களா என்ற சிந்தனை இருக்கும் அதேவேளையில் இவ்வாறு எடுக்கும் முயற்சிகள் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களின் நிலையை மேலும் மோசமாக்கிவிடும் என்ற அச்சமும் கொண்டுள்ளனர்.

“கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்புடன் திரும்ப வருவார்கள் என்று நாங்கள் நம்பிக்கைக்கு எதிராகவே நம்பிக்கையை கொண்டுள்ளோம். எனினும் தற்போதைக்கு இது குறித்து நீங்கள்  எவரிடத்திலும் கேட்க வேண்டாம் ” என்று குடும்பத்தினர் கேட்டு கொண்டனர் .கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கூட தெரியாமல் இவர்கள் இருக்கிறார்கள். சிலர் காவல் நிலையங்களில் இருக்கலாம் என்றும் வேறு சிலர் ராணுவ முகாம்களில் இருக்கலாம் என்றும் சந்தேகப் பேச்சைத்தான் பேசுகின்றனர். சட்டவிரோதமாக இவ்வாறு போலீஸ் அல்லது இராணுவம் ஒருவரை அடைத்து வைப்பது குற்றம் என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால் காஷ்மீர் பொருத்தவரையில் கொத்து கொத்தாக கொல்லப் பட்டவர்களின் சமாதிகள், கடுங்காவளின் போது கொலை செய்யப்பட்டவர்கள், கைதுக்கு பின் தொலைந்து போனவர்கள் என ஒரு நீண்ட வரலாறே உள்ளது. இது இங்கு வாடிக்கையான விஷயம்.

சௌராவில் நடைபெற்ற  போராட்டத்திற்கு வருவோம். அங்குள்ள மக்களிடம் உங்களால் தொடர்பு கொள்ள முடிந்ததா ?

எங்களால் சௌரா பகுதிக்கு  செல்ல முடியவில்லை .காரணம் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. எனினும் நாங்கள் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனைக்கு சென்றோம் அங்கு இரண்டு நபர்கள் பெல்லத் குண்டுகளால் கடுமையான முறையில் கண்கள் , முகம் கைகள் என உடல் முழுவதும் காயங்கள் கொண்ட நிலையில் இருந்தனர்.இவர்கள் மீதான தாக்குதல் நேற்றுமுன்தினம் சௌராவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் போது தான் என்று தெரிந்து கொண்டோம்.

கௌராவில்  உள்ள மருத்துவமனையில் இன்னும் அதிகமான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு செல்ல நாங்கள் எவ்வளவு முயற்சித்தும் ராணுவத்தினர் எங்களை செல்ல அனுமதிக்கவே இல்லை.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் துறை துணை ராணுவத்தினர் எண்ணிக்கை இந்திய மீடியாக்களில் வெளிவந்த  அளவை விட பல.. பல.. பல.. மடங்கு அதிகமாக உள்ளனர் என்பது தான் எங்கள் கருத்து. ஒவ்வொரு காஷ்மீருக்கும் 4 சி.ஆர்.பி.எஃப்துணை இராணுவப் படையினர் உள்ளனர். காஷ்மீர் பகுதி முழுக்க சி.ஆர்.பி.எஃப் பரவி காணப்படுகின்றனர். காஷ்மீரில் எந்த ஒரு வீதியிலும் எந்த ஒரு வீட்டிற்கு முன்பும் சி.ஆர்.பி.எஃப் படையினரை காணாமல் இருக்க முடியாது. இது மிகவும் கொடுமையானது.

அப்படியானால் உங்கள் கள நிலவரப்படி சௌராவில் நடைபெற்றது மிகப்பெரும் போராட்டமா?

ஆம்.அது மிகப் பெரும் போராட்டம் என்பது ம உறுதி. அதை தொடர்ந்தும் போராட்டங்கள் நடைபெற்றன. மறுநாள் நாங்கள் சௌராவை நோக்கி பயணித்த பொழுது போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் எங்களை தடுத்த நேரத்தில் எங்களால் பல வாலிபர்களை காணமுடிந்தது. அவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தி கட்டுப்படுத்த முடியாமல் சிஆர்பிஎப் படையினர் திணறினர். எங்களிடம் இதற்கான புகைப்படங்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் மிகவும் கோபத்திலும் ஏமாற்றத்திலும் உள்ளனர். இதற்கான சாட்சியங்கள் எங்களிடத்தில் காணொளி யாக பதிவு செய்து வைத்துள்ளோம்.

அவர்கள் , ‘நாங்கள் கைதிகளைப் போலவே நடத்த படுகிறோம். நாங்கள் அடிமைகளைப் போலவே நடத்த படுகிறோம் ‘ என்று கூறினர்.

எங்கு சென்றாலும் இதே வாசகத்தை தான் எங்களால் கேட்க முடிந்தது. நீங்கள்.. ” எங்கள் வீட்டை சிறைச் சாலையாக மாற்றி உள்ளீர்கள். எங்கள் கிராமங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் சிறைச்சாலைகளாக மாற்றி உள்ளீர்கள். பெருநாள் அன்றும் மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. அருகாமையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் வாழ்த்தி கொள்ள முடியவில்லை.” என்று கூறினர். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பெரிய வருத்தமும், கவலையும் அவர்கள் பேச்சில் தெரிந்தது.

மக்கள் தங்கள் எதிர்ப்பை ஜனநாயகபூர்வமாக அமைதியான முறையில் வெளிப்படுத்த நீங்கள் அனுமதிப்பதில்லை. கடுமையான ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அதனால் தான் மக்களின் அனைத்து உணர்வுகளையும் அடக்கப்படும் போது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன…

எனினும் இப்படிப்பட்ட கடுமையான ஊரடங்கு உத்தரவின் போதும் கூட.. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று உயிர் மீது அக்கறையற்ற ஒரு சிலர் மட்டும் வீதிக்கு வருகின்றனர்.. ‘உங்களால் ஆனதை நீங்கள் செய்து கொள்ளுங்கள்! ‘என்று சொல்லும் இப்படிப்பட்டவர்களையும் காண முடிந்தது. ஆனால் இப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவே!

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த நாடுகின்றனர். அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவும், தங்கள்  கருத்துக்களை தெரிவிக்கவும் விரும்புகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமானால் நான் நிச்சயமாக கூறுகிறேன்..   மக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்ரீநகர் மற்றும் வேறு இடங்களிலும்  போராட்டத்திற்கு முன் வருவார்கள். ஆனால் அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

அப்படியானால் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமானால்  வன்முறை கலந்த போராட்டங்கள் நடைபெறுமா ? 

அப்படியானால் அவர்கள் பொய் சொல்லக்கூடாது.சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் காரணத்தினால் காஷ்மீர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.. அதை மிகவும் வரவேற்கிறார்கள்.. அங்கு  நிலைமை சீராக உள்ளது .. என்பன போன்ற பொய்களை பேசக்கூடாது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை ஒவ்வொரு  காஷ்மீரியின் விருப்பத்திற்கும்   மாறாக தான்  நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். அதனால்தான் நாங்கள் அங்கு உள்ளவர்களை சிறைபிடித்து வைத்துள்ளோம், அவர்களை பேச விடாமல் தடுத்து வைத்துள்ளோம் . ஆக்கிரமித்து உள்ளோம் என்று உண்மையை சொல்லி விட வேண்டும்.

காஷ்மீரி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று இந்திய அரசாங்கம் பொய் சொல்லக்கூடாது இங்கு யாரும் மகிழ்ச்சியுடன் இல்லை இங்கே ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள்.


பெருநாள் வரும் வேலையை தேர்ந்தெடுத்து இவ்வாறு செய்தது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மக்கள் காண்கிறார்கள் . “எங்களுக்கு இருப்பது இரு பண்டிகை தினங்கள் மட்டுமே” . அதில் ஒன்றை முழுவதுமாக கெடுத்து விட்டார்கள். எங்களால் எந்த ஒரு இடத்திலும் மக்களின் கொண்டாட்டத்தை காணமுடியவில்லை. 7 அல்லது 8 வயதிருக்கும் மேற்பட்ட எந்த குழந்தையும் புத்தாடை அணிந்திருக்கவில்லை.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe