Ads Area

கல்முனை ஸாஹிரா கல்லுாரியின் அபிவிருத்தி தொடர்பாக கல்வியமைச்சரோடு கலந்துரையாடல்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்;கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸூக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) வியாழக்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் நிரந்தர அதிபர் நியமனம் குறித்தும் விரிவாக பேசினார்.

இதனை அடுத்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதாக தெரிவித்ததுடன் பாடசாலைக்கான நிரந்தர அதிபரினை உடன் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.


இச்சந்திப்பில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் றிப்தி முஹம்மட்டும் கலந்து கொண்டார்.

-ஊடகப் பிரிவு-
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe