Ads Area

அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் எந்த வித ஆயுதங்களும் இல்லை - சோதனையின் பின்னர் தெரிவிப்பு.

புத்தளம், தில்லையடியில் உள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வீடு சோதனைக் உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த தினங்களில் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார். அதன் அடிப்படையிலேயே குறித்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் குறித்த வீட்டை சோதனை செய்துள்ளனர். இருப்பினும் குறித்த வீட்டில் இருந்தே எந்த ஒரு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe