Ads Area

ஆண் துணையின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சவுதி பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண் துணையின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சவுதி பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சவுதி அரேபியாவில் 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் துணையின்றி எங்கும் பயணம் செய்யலாம் என்ற புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து தற்போது பல பெண்கள் கல்வி-மருத்துவம்-சுற்றுலா போன்ற தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு தனிமையில் பயணம் செய்வதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றனர்.

தனியாக பயணம் செய்ய விண்ணப்பிக்கும் 21 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்களுக்கான கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை வழங்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதோடு 21 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்கள்-ஆண்கள் வெளிநாடு செல்ல வேண்டுமானால் அவர்களுக்கான பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பல்வேறு உரிமைகளையும்-சுதந்திரங்களையும் வழங்கி வரும் சவுதி அரேபியா குழந்தை பிறப்பு, திருமணம் அல்லது விவாகரத்து ஆகியவற்றை பதிவு செய்வதற்கான உரிமையையும், உத்தியோகபூர்வ குடும்ப ஆவணங்களை வழங்குவதற்கும், சிறார்களாக இருக்கும் குழந்தைகளுக்கு பாதுகாவலராக தகுதி பெறுவதற்கும்  முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது பெண்கள் தனியா பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் நூற்றுக்கணக்கான சவுதி பெண்கள் தனிமையில் பஹ்ரைனுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது, ஒரு மணி நேரத்திற்குல் 1000 பேர்கள் வரை இவ்வாறு பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மூலம் - Saudi Gazette
தமிழில் - மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe