உயர்தர முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்துசெல்ல பரீட்சைகள் திணைக்களம் அனுமதியளித்துள்ளபோதும் சொந்த விருப்பு, வெறுப்புக்களுக்காக மாணவியரைத் தடுக்கும் நபர்களுக்கு எதிராக கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

