(றியாத் ஏ.மஜீத்)
சாய்ந்தமருது பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் முதியோருக்கு பொதுசன உதவு தொகை வழங்கும் நிகழ்வு இன்று (20) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஏ.சபீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.வி.சம்சுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஜெலீலா, எஸ்.ஐ.பஸ்மியா, கிராம சேவக உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம். மாஹிர், ஏ.எம்.எம்.அஜ்ஹர், எம்.ஐதாக், ஏ.எம்.இல்பான் உள்ளிட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது 43 பேருக்கு முதியோர் பொதுசன உதவு தொகைக்கான அட்டையினை நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்ட்டது.