Ads Area

வவுனியாவில் கழுத்தில் தாவணி இறுகியதில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு....!!!!!

சல்வார் தாவணியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோத போது கழுத்தில் தாவணி இறுகியதில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு....!!!!!

இச்சம்பவத்தில் வவுனியா, செட்டிகுளம் பகுதியை சேர்ந்த சசிதரன் கிருசான் (08) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன், சல்வார் தாவணியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோதே, அத்தாவணி கழுத்தில் இறுகியதாகவும் அதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டில், குறித்த 08 வயதுச் சிறுவன், தனது 05 வயதுச் சகோதரனுடன் சல்வார் தாவணியை யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது, குறித்த தாவணி 08 வயதுச் சிறுவனின் கழுத்தில் இறுகியதில் அச்சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளான்.

சல்வார் தாவணி இறுகியதைக் கண்ட05 வயதுச்சகோதரன்,கூச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை.

குறித்த சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe