இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பினால் சாய்ந்தமருது நூலகத்திற்கு பெறுமதி மிக்க புத்தகங்கள் கையளிப்பு.
இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பினால் சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு உயர் தர மாணவர்கள் மற்றும் ஏனையவர்களும் பயன் பெறும் வகையில் பெறுமதிமிக்க நூல் தொகுதியினை சாய்ந்தமருது பொது நூலகத்தின் பட்டய நூலகர் (Charted Librarian) ஏ.சி. அன்வர் சாதத் உத்தியோகபூர்வமாக கையாளிக்கும் நிகழ்வு 23.08.2019 வெள்ளிக்கிழமை அமைப்பின் தலைவர் முஸ்தபா முபாறக் தலைமையில் நடை பெற்றது.
"நீரின்றி அமையாது உலகு. நல்நூல்கள் இன்றி அமையாது அறிவார்ந்த உலகு. இதை உருவாக்குவதில் நூலகங்களின் பங்கு மகத்தானது. ஆறு இல்லாத ஊர் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரும் பாழானதே"






