Ads Area

இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டி வைத்து பராமரித்து வரும் நடிகை ரேகா.

நடிகை ரேகா, தமிழ்,  மலையாளம், தெலுங்கு பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முதல் படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தை யாராலும் மறக்க முடியாது.

அதில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் வட்டாரத்தை கூண்டோடு கவர்ந்தார். அதை அடுத்து அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் ‘புன்னகை மன்னன்’. இந்தப் படத்தையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 

இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதாவது, நடிகை ரேகா நடித்த படங்கள் நிறைய பார்த்தாலும் அவரது அப்பா ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தாராம். அவருக்கு தனது மகள் சினிமாவில் நடித்து வந்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். 

தன் அப்பா மீது அதீத அன்பு வைத்திருந்த நடிகை ரேகா தான் இறப்பதற்கு முன்பதாகவே கீழ்ப்பாக்கத்தில் அவரின் அப்பாவின் சமாதிக்கு அருகிலேயே அவருக்காக கல்லறையை கட்டியுள்ளாராம்.

இறந்த பிறகு அந்த கல்லறையில் தான் தனது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்கிறாராம். 

மேலும் அந்த கல்லறை இருக்கும் இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளாராம். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe