கண்டியைச் சேர்ந்த ஒரு இளம் தாயொருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் ஆசனங்கள் கிடைக்காததால் புகையிரதத்தில் தரையில் அமர்ந்து கொழும்புவரை பயணித்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கண்ணீரை சிந்த வைக்கும் இந்த காட்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த சனிக்கிழமை கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் நகர்சேர் கடுகதி புகையிரதத்தின் இரண்டாம் வகுப்பிற்கான பயணச்சீட்டை தாயொருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
குழந்தையுடன் வந்த அந்த தாய்க்கு மனிதாபிமான முறையில் ஒரு ஆசனத்தை கூட கொடுக்க யாரும் முன்வரவில்லை என்பது கலைக்குரிய விடயம் என சமூக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


