காரில் பயணம் செய்யும் முன் வாகனம் சீராக இயங்குவதை சரிபார்த்தாலும், சில சமயங்களில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் போகலாம். அவ்வாறான சமயங்களில் பாதுகாப்பாக தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
கார் பயணம் செய்யும் முன் காரின் பிரேக் மற்றும் ரியர் கண்ணாடிகளை சரி செய்வது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். எனினும் சில சமயங்களில் காரின் பிரேக் சரியாக வேலை செய்யாமல் போகலாம். இவ்வாறு சாலையில் செல்லும் போது காரின் பிரேக் வேலை செய்யாமல் போகலாம்.
01. திடீரென காரில் பிரேக் பிடிக்காமல் போனால் முதலில் மனதில் பதற்றமடைவதை தவிர்க்க வேண்டும்.
02. அடுத்து காரின் ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.
03. இனி காரின் வேகத்தை குறைத்து கியரை படிப்படியாக முதல் கியருக்கு கொண்டு வந்து, பின்னர் காரை மெதுவாக சாலையின் ஓரத்தில் நிறுத்த முனைய வேண்டும்.
04. முதல் கியருக்கு வந்ததும் காரின் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
05. பதட்டத்தில் கார் வேகமாக செல்லும் போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தக் கூடாது, இவ்வாறு செய்தால் ஹேண்ட் பிரேக் கேபிள் அறுந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.