Ads Area

தனது வீட்டுப் பணிப்பெண்ணின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட சவுதி எஜமான்.

தனது வீட்டில் பணிப் பெண்ணாக பல வருடங்கள் கடமையாற்றிய இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள இந்தோனேசியாவுக்குச் சென்று திருமணத்திலும் கலந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்  சவுதி அரேபியாவைச் சேர்ந்த எஜமானார் ஒருவர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சவுதி எஜமானாரான அஹ்மட் அல்-ஹம்தி, குறித்த பணிப் பெண் எனது வீட்டு வேலைகளை திறன்பட செய்யக் கூடியவர், மிகவும் நற் பண்புகள் கொண்டவர், எல்லோரோடும் அன்பாக பழகக் கூடியவர், வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டு சிறப்பாக செய்து முடிப்பவர்.

ஒருநாள் தனது மகளுக்கு இந்தோனேசியாவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் அதற்கு தான் செல்ல வேண்டும் என்றதோடு அந்த திருமணத்திற்கு நீங்களும் வரவேண்டும் என எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார், அவர் எங்களையும் திருமணத்திற்கு அழைத்த போது எந்தவித மறுப்பும் தெரிவிக்காது உடனே வருவதாக ஒப்புக் கொண்டு திருமணத்திலும் கலந்து கொண்டோம்.

இந்தோனேசியாவில் மிகவும் சாதாரணமாகவும், எளிமையாகவும் திருணம் செய்கிறார்கள், இத் திருமணத்தில் ஆகக் கூடியது 50 பேர் வரைதான் கலந்து கொண்டார்கள் திருமணம் காலையில் ஆரம்பித்து இரவு 8 மணி வரை தொடர்கிறது எனவும் திருமணத்தில் கலந்து கொண்ட தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

செய்தி மூலம் - saudigazette
தமிழில் - மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe