போதைப் பொருள் ஒழிப்பில் ஜனாதிபதி அர்ப்பணிப்பு ; ஆனால் அவரது மகளின் ஹோட்டலில் மதுபானத்திற்கு அனுமதி..?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி எவ்வாறு கொடுக்கப்பட்டது, யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியான ஹேஷா விதானகே நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
'போதைப்பொருள் ஒழிப்பில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் என இவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி எவ்வாறு கொடுக்கப்பட்டது, யாரால் கொடுக்கப்பட்டது? போதைப்பொருள் ஒழிப்பில் முதலில் ஜனாதிபதி முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும்.
அதனை விடுத்து எம் கட்சி மீது தேர்தலை இலக்காகக்கொண்டு சேறு பூச முற்படக்கூடாது, இவர்கள் மோசடிகளை செய்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமகான சிறிகொத்தாவை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை கூறுவது தவறான விடயமாகும் என்றார்.
எனினும் இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரும் எம்.பி.யுமான மஹிந்த அமரவீர பதிலளிக்க முற்பட்டபோதும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அதற்கு அனுமதிக்கவில்லை.