முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன் இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.
2. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.
3. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கும் சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக் குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
4. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
6. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37 வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;
7. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக - உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம் கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..!