பாறுக் ஷிஹான்
புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார் மாணவர் கி.முகேஷ் ராம்.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவிற்கு கிழக்கு மாகணத்திலிருந்து இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் கணித பிரிவு கி.முகேஷ் ராம்(வயது-17) என்ற மாணவன் தனது கண்டுபிடிப்பு தொடர்பில் கருத்து கூறுகையில்,
இரவு வேளையில் ஆள்நடமாற்றமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து நடைபெற்றால் இணைத்துக்கொள்ளப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கி மரணத்தை தவிர்த்துக் கொள்வதற்கான தலைக் கவசத்தினை கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்பானது விபத்துக்கள் நடைபெற்ற இடத்தினை தெரியப்படுத்தும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொடுகை மென்பொருளை பயன்படுத்தி பாதிப்புக்கள் சம்பந்தமான குறுஞ்செய்தி மூலம் கைத்தொலைபேசிக்கு தகவல்கள் அறிவுறுத்தப்படும் வகையில் 5000.00 ரூபாய்க்குட்பட்ட விலையில் வடிவமைக்க பட்டுள்ளது.