ஒருவர் ஞானதேரர் என்னும் புத்த பிக்கு இன்னொருவர் பிரதி அமைச்சர் பாலித்த பெரும இருவருமே சிங்களவர்கள் இருவருமே நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள். ஆனால், ஞான தேரர் என்னும் பிக்கு கைது செய்யப்படவில்லை பிரதி அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏன் இந்த பாகுபாடு? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால் இருவரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஏனென்றால், ஞானதேரர் நீதிமன்ற உத்தரவை மீறியது தமிழருக்கு எதிராக. எனவே அது கண்டு கொள்ளப்படவில்லை.
பிரதி அமைச்சர் பாலித்த பெரும நீதிமன்ற உத்தரவை மீறியது ஒரு தமிழனுக்காக. அதனால்தான் அவர் சிங்களவராக மட்டுமல்ல அமைச்சராக இருந்தபோதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் தைரியமாக நீதிமன்றத்தை அவமதிக்கிறார். தைரியமாக நீதிமன்ற உத்தரவை மீறுகிறார். இதில் கேவலம் என்னவென்றால் தமிழருக்கு எதிராக செயற்படும் இந்த இனவாத பிக்கு ஞானதேரரை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரு தமிழ் தலைவர்கூட பாலித பெருமவை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரவில்லை.
சரி. இப்போது இதில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன? ஒரு சாதாரண விடயத்தில்கூட இந்த புத்த பிக்குகள் நீதிமன்றத்தையோ சட்டத்தையோ மதிக்க தயாரில்லை என்பதை காட்டியுள்ளார்கள். இலங்கை அரசும் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது. எனவே இவர்களிடத்தில் எப்படி இனப்படுகொலைக்குரிய நீதியை நாம் பெற்றுக்கொள்ள முடியும்? அல்லது இனப் படுகொலைக்கான நீதியை வழங்குவார்கள் என நம்ப முடியும்?