Ads Area

அதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்.

சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை மட்டுப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி இரவு வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், தென், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 200மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe