எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவு தெரிவித்து, கொலன்னாவ பகுதியில் நேற்று (29.09.2019) நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.