இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பினால் பாடநுால்கள் கையளிப்பு.
இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பினால் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழி மூலமாக (க.பொ.த) சாதாரண தரம் 11 ல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு பயன் பெறும் விஞ்ஞான பாடத்துக்கான (PHYSICS, CHEMISTRY, BIOLOGY) ஆகிய பாடங்களின் ஆங்கில மொழி மூலமான பெறுமதியுடைய செயல் நூல் தொகுதியினை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையாளிக்கும் நிகழ்வு 18.09.2019 புதன்கிழமை அமைப்பின் தலைவர் முஸ்தபா முபாறக் தலைமையில் நடை பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான அமைப்பின் உயர் பீட உறுப்பினர் ஏ.சி.எம். அப்றாத் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
ஊடாக பிரிவு,
இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பு,
ஸ்ரீ லங்கா.