மாணவர்களே பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்லும் ஆபத்தான பிரயாணங்களை தவிருங்கள்!!!
இப்படி பட்ட ஆபத்தான போக்குவரத்தினால் வருடா வருடம் எத்தனையோ உயிர்களை பறிகொடுக்கின்றார்கள்.
இதனால் உங்களின் உயிர் மட்டுமல்ல உங்களின் எப்படியெல்லாம் வாழவைக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு வாழும் பெற்றோர்களும் உங்களது உயிர் இழப்பை நினைத்து மனநோய், மாராடைப்பு, வந்து இறக்கின்றனர்.
உங்கள் உயிரை நீங்கள் பாதுகாப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதுகாத்துக்,கொள்ளுங்கள்.
பேருந்து கட்டுப்பாடு இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் இந்திய தமிழ் சினிமா படங்களில் காலேச் முடித்து ஹீரோயின் நாயகியை பேருந்தில் தொங்கியபடி காதலிப்பதை பார்த்து தாங்களும் அதே முறையை பின்பற்றுவது தற்போது சில பேருந்துகளில் ரூட் தல என்று தங்களை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு இடத்திற்கு பொருப்பாளராக பட்டப்பெயரை சூட்டி அடிதடியில் ஈடுபடுவது தொடர்ந்து பேருந்துகளில் பயணிப்பவர்கள் பலர் கூறுவதுண்டு.
இலங்கை போக்குவரத்து துறை இது விடையத்தில் கடுமையான சட்டநடவடிக்கையை பின்பற்றினால் எத்தனையோ உயிர் இழப்பில் இருந்து எத்தனையோ உயிர்களை பாதுகாக்க முடியும் ஒழுங்கான சட்டமே ஒரு நாட்டில் முதுகெலும்பு.
நன்றி - இம்தியாஸ் மதானி.