இலங்கையில் முகத்தை மூடி புர்கா, ஹிஜாப் ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கே, இந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் அணிவற்கு பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர்.