கோத்தாபயவின் இரட்டை குடியுரிமை இன்று விசாரனை, தீர்ப்பு எதிரானால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை விவகார சர்ச்சைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தபாயவுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் இன்றைய தீர்ப்பு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
கொழும்பில் மேல் நீதிமன்றத்திற்கு செல்லும் வீதிகளின் இரு முனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதியின் இரு புறமும் தடுப்புக் கட்டைகள் போடப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.