மஜீட்புர சமூக சேவை அமைப்பின் 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 26-10-2019 சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு மஜீட்புர சமூக சேவை அமைப்பின் தலைவர் A. றசூல் அவர்கள் தலைமையில் வெகு விமர்சயாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக எம்.ஐ.எம். மன்சூர் MP அவர்களின் செயலாளர் M.M. ஷகூபீர் சட்டத்தரணி அவர்களும், சிறப்பு அதீதியாக M.B.M. அன்வர் (JP) முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அவர்களும், கௌரவ அதீதியாக மஜீட்புர பாடசாலையின் அதிபர் M. முஸம்மில் அவர்களும், M.M. தெளபீக் (BA.Dip.In.Ed.M/G. (Tr) அவர்களும் மற்றும் மஜீட்புர ஜும்ஆ பள்ளிவாசலின் இமாம் சறூக் மௌலவி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
சித்தியடைந்த இரண்டு மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், கற்றல் உபகரணங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 22 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டப்பட்டனர்..
அல்லாஹ்வின் உதவியினாலும், மஜீட்புர சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்களின் அயறாத முயற்சியினாலும் இப்பாராட்டு விழாவானது மிக மிக சிறப்பாக இடம்பெற்றது
இதற்காக நிதி உதவிகளையும் ,ஒத்தாசைகளையும் வழங்கிய அனைவருக்கும். இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
President
A. Rasool




















