Ads Area

சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள சிங்கள டீச்சர் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் பதிவு.

சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள சிங்கள டீச்சர் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் பதிவு.

தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் மொடல் அழகியான சிங்கள யுவதி ஒருவரது போட்டோசூட் புகைப்படங்கள் பற்றி அமைச்சர் மனோ கணேசன் தனது முகநுால் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்,



இன்னொரு மொழியை படிக்க கவர்சியான அளவுகளை கொண்ட "டீச்சர்" வேண்டுமென்றால், வேண்டும்தான். அப்படியாவது படித்து கிழிக்கட்டும்!

கல்லூரியில், எனக்கு படிப்பித்த டீச்சர்ஸ் பலர் பேரழகிகள். ஆனால் சிங்கள டீச்சர் யாரும் கிடைக்கல. ஏனெனில் கல்லூரியில் நான் சிங்கள பாடம் படிக்கவில்லை.

2001ம் ஆண்டு முதன்முறை நான் நாடாளுமன்றம் போனபோது எனக்கு சிங்கள அரிச்சுவடி மட்டுமே தெரியும். பிறகு சிங்கள மொழியை நானேதான் சுயமாக படித்தேன். எவரது துணையும் இல்லாமல் ஒரே வருடத்தில் பேச, எழுத, வாசிக்க நானே சுயமாக படித்து விட்டேன். இன்று சிங்கள ஊடகங்களுக்கு போய் வெளுத்து கட்டுகிறேன்.

என் கேள்வி, ஒருவேளை "அழகிய டீச்சர்" கிடைத்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் படித்திருக்க மாட்டேனோ? அழகிய டீச்சர் இல்லாமலேயே நான் படித்து விட்டேனே!
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe