நன்றி - Lanka Health Tamil.
தேசிய போக்குவரத்து மருத்துவ சான்றிதழ் பெற செல்லும்போது கவனிக்க வேண்டியவை:- By:- Dr Ziyad Aia
நாட்டில் மிகப்பெரிய ஊழல் நிறைந்த ஒரு விடயமாக டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் செயன்முறை காணப்படுகிறது.
1999 க்கு முன் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் போது அதற்குரிய மருத்துவ சான்றிதழை RTA இல் பதிவுசெய்யப்பட்ட தனியார் துறையில் உள்ள யாரேனும் வைத்தியர் ஊடாக பெறக்கூடியதாக இருந்தது.
( வைத்தியருக்கே தெரியாமல் அவரது Rubber Stamp பாவித்த வரலாறுகளும் உண்டு.)
இதனை தவிர்க்கும் முகமாகவும், மருத்துவ சான்றிதழ் கட்டணம் 800rs இல் இருந்து, ஏனைய சோதனைக்கான கட்டணங்களை Ministry of Transport & Civil Aviation க்கு பெறும் நோக்கிலும், 8 வருடங்களுக்கு ஒருமுறை Licence ஐ புதுப்பிக்கும்போது புதிய மருத்துவ சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற Act இன் அடிப்படையிலும் National Transport Medical Institute க்கு or அதன் மாவட்ட கிளைகளுக்கு நேரடியாக சென்று சான்றிதழ் பெறவேண்டும்.
(National Transport Institute Act No.25 of 1997, Date Established 01.01.1999)
தற்போது மாவட்ட ரீதியான கச்சேரிகள் ஊடாக மருத்துவ சான்றிதழ் வழங்கும் முறையினால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அதில் பிரதான பிரச்சினைதான் மருத்துவ சான்றிதழ் வழங்கும் வைத்தியர்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறை. இதனால் நீண்ட நேர காத்திருப்பு மற்றும் அலைச்சல்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை மிகப்பரந்த பிரதேசத்துக்கு ஒரே ஒரு வைத்தியரை கொண்ட அம்பாறை கச்சேரியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது. கல்முனை பிராந்தியத்திலும் ஒரு நிலையத்தை நிறுவ வேண்டும் என்ற கோஷமும் நிலவுகிறது.
01. குறைந்த வயது :- 17 (Heavy Vehicles 21)
02. குறைந்த உயரம்:- 4 அடி, 8 அங்குலம் (Heavy Vehicles 5 அடி)
03. குறைந்த நிறை:- 36.5kg (Heavy Vehicles 41kg)
04. Chest X-Ray:- Heavy Vehicles க்கு மாத்திரம்
05. இரத்த அழுத்தம் (BP):- 170/100mg க்கு கீழ்
இரத்த சக்கரை (சீனி) அளவு:-
RBS:- 200mg/dl or குறைவு ( Fasting இல்லாமல் பார்ப்பது.)
FBS:- 140mg/dl ( Fasting Blood Sugar:-10 மணிநேரம் உண்ணாமல் இருந்து பார்ப்பது.)
பொதுவாக சீனி, பிரஷர் போன்ற நோய் உள்ளவர்கள் வழமையாக பாவிக்கும் மருந்துகளை பாவித்து குறிப்பிட்ட எல்லைக்கு கீழ் கட்டுப்படுத்துவது முக்கியமானது. இல்லையென்றால் மருத்துவ சான்றிதழ் நிராகரிக்கப்பட்டு Control பண்ணியபின் மீண்டும் வர சொல்லி திருப்பி அனுப்பப்படுவர்
இருதய கோளாறு (Murmurs எனும் வித்தியாசமான சத்தம்), கேட்டல் (Hearing) குறைபாடு உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சை பெற்று மருத்துவ சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.
பார்வை:-
6/12, அதாவது பார்வைக்காக 6 மீட்டர் தூரத்தில் வைத்து சோதிக்கும் அட்டையின் கடைசி 2 வரிகளுக்கு மேலுள்ள வரிவரை வாசிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
கண்ணாடி பாவிப்பவர்கள் அதனை உபயோகித்து வாசிக்கலாம். நீண்ட நாட்கள் கண்ணாடியை மாற்றாதவர்கள் பார்வையை ஒரு முறை சோதித்த பின் செல்வது சிறப்பு.
மேலதிக தகவல்கள் படத்தில்.