தமிழ் நாட்டில் உள்ள அரியலுார் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை கொடூர மனம் படைத்த மகன்கள் சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் பட்டம்மாள். 95 வயதான இந்த மூதாட்டியின் கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு ஸ்வீட் கடை நடத்தி வரும் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியரான சதாசிவம் என இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
தாயை சில நாட்கள் வைத்திருந்த மகள் சகுந்தலா மீண்டும் சகோதரர் சண்முகத்தின் வீட்டுத் திண்ணையில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்துள்ளார். ஆத்திரமடைந்த சண்முகம் மற்றொரு மகனான சதாசிவம் வீட்டு வாசலில் மூதாட்டி பட்டம்மாளை போட்டுவிட்டு வந்துள்ளார். இதையடுத்து சதாசிவம் தாய் பட்டம்மாளை சாலையில் வீசிச் சென்று விட அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
“தாயின் பாதத்தில்தான் சுவர்க்கம் இருக்கிறது - நபிகள் நாயகம்”