குழந்தை சுர்ஜித் உயிரோடு கிடைத்துவிட மாட்டானா என்று பொதுமக்கள் கண்ணீரும் கம்பலையுமாக காத்து கிடந்தனர். வீட்டில் இருக்க நிலை கொள்ளாமல், நிகழ்விடத்துக்கே வந்து குவிந்துவிட்டனர்.. சுஜித்தின் மீட்பு பணிகள்தான் தமிழக டிவிக்களில் ஓடிக் கொண்டிருந்தன.
சுஜித் இறந்ததுமே மக்களின் துக்கம் பெருகிவிட்டது... தங்கள் வீட்டு பிள்ளைபோலவே கலங்கி போய் உள்ளனர்.. அவனது உடலை அடக்கம் செய்ய திரண்டு வந்துவிட்டனர்... அழுகிய உடலுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, ஒப்படைக்கப்பட்டதுமே இறுதிசடங்கு வேலைகள் ஆரம்பமாயின.
இதை பார்த்து நெட்டிசனகள் ஆவேசமாகிவிட்டனர். ஏன்யா.. நீயெல்லாம் ஒரு மனுஷன்தானா? எங்கே செல்பி எடுக்கணும்..ன்னு ஒரு விவஸ்தை இல்லையா? என்று கோபத்துடன் பதிவுகளை போட்டுள்ளனர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உடனே ஒரு செல்பி எடுப்பது ஒன்றாகிவிட்டதுதான்...ஆனால் இந்த விபரீதம் சிலநேரங்களில் விபத்துக்களில் கூட நடந்துள்ளது.
விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை மீட்காமல், அதையும் செல்பி எடுப்பது தமிழகத்தில் நடந்துள்ளது. வெறிகொண்டு அரிவாளை தூக்கி வெட்டியபோதும், அதையும் தடுத்து நிறுத்தாமல் செல்போனில் வீடியோ எடுப்பதையும் தமிழகம் கண்டுள்ளது.

