Ads Area

சமய ஸ்தானங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடை - மஹிந்த தேசப்பிரிய.

சமய ஸ்தானங்களில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளின் போது மதகுருக்களினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக அமையும் விதத்தில் அறிவிப்புக்கள் விடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் கூறியுள்ளார்.

குறிப்பாக போயா தின பௌத்த மத உபதேசங்கள், வழிபாட்டு நிகழ்வுகள், கிறிஸ்தவர்களின் ஞாயிறு ஆராதனை, இந்துக்களின் கோவில் வழிபாடுகள் மற்றும் முஸ்லிம்களின் ஜும்ஆப் பிரசங்கங்கள் என்பவற்றின் போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற இடங்களில் சமய தலைவர்களினால் குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை ஆதரித்து விடுக்கப்படும் தகவல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் இடம்பாடுகள் காணப்படுவதாகவும் இதன்கீழ் ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவரின் பிரஜா உரிமை கூட பறிக்கப்படலாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe