இந்தியாவில் இருந்து 16 இறக்குமதியாளர்கலூடாக இறக்குமதி செய்யப்பட்ட 200 Metric Ton காய்ந்த மிளகாயில் Cancer நோயை உருவாக்கக்கூடிய Aflatoxin அதிகளவில் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் Food Hygiene Bureau ஐ சேர்ந்த வைத்திய நிபுணர் Dr Sapumal Dhanapala கருத்து தெரிவிக்கையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரி சுங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைகளை சுங்க திணைக்களம் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
Aflatoxin என்றால் என்ன?
Aflatoxin என்பது Aspergillus எனும் Fungus இனால் உருவாக்கப்படும் நச்சுப் பதார்த்தம் ஆகும். இது பொதுவாக நாட்பட்ட சோளம் (Corn), கச்சான் (Peanut), காய்ந்த மிளகாய், மற்றும் விதைகளில் காணப்படலாம். இது அதிகளவில் உட்கொள்ளப்படும்போது Cancer ஐ உருவாக்கும் வல்லமை கொண்டது என பல விஞ்சான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஏனைய நாடுகளில் பாவனைக்கு உதவாது என்று கைவிடப்பட்ட இவ்வாறான பொருட்களை கலப்படம், மற்றும் Chemicals கலந்து இலங்கை போன்ற நாடுகளுக்கு லஞ்சம், ஊழல், அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்படுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல.
இலங்கையில் நாளாந்தம் 76 புதிய கேன்சர் நோயாளிகள் கண்டுபிடிக்க படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
செய்தி மூலம் - http://www.hirunews.lk
நன்றி - Lankahealthtamil.com