காதி நீதிமன்றங்களின் நீதிபதிகளாக செயற்படும் சிலர் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வண.அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
காதி நீதிமன்றம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
காதி நீதிமன்ற கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் வண. அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட மகா சங்கரத்தினரால் பாராளுமன்ற சட்டமூலம் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.