நற்பிட்டிமுனை பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு ஆயுதம் தாங்கிய நபர்கள் நடமாடுவதாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை .
எனும் குறித்த பகுதியில் கைக்குண்டொன்று வெடிக்காத நிலையில் மீட்பப்பட்டுள்ளது.
மேலும் நேற்று நள்ளிரவு வீதியால் சென்ற நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் குறித்த ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பாகவும் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரதேச வாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய இக்கைக்குண்டு இயங்கு நிலையில், கல்முனை கிட்டங்கி வீதியின் நற்பட்டிமுனை சந்தியில் மீட்கப்பட்டுள்ளது.

