சுய விருப்பத்தில் மாற்றமில்லை
கட்சியின் முடிவு எமது முடிவல்ல!
மஹிந்த பக்கம் சாரும் பி.ச. உறுப்பினர் அஸ்வர்!
'கட்சிக்கு அடிபனிய இது பொதுத் தேர்தல் இல்லை. எமது சுய விருப்பங்களையும் சாடுகிறோம்'
இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் ஆணித்தரமாக கூறுகின்றார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில்,
நான் கட்சிக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. கட்சியால் வளர்ந்தவன் நான் அல்ல. என்னுடன் எனது பிரதேச மக்கள் நிற்கிறார்கள்.
இந் நிலைமையில் நாட்டுக்கு வருகின்ற தலைவர் குறித்து நாம் தெளிவாக உள்ளோம்.
வெறுமெனே கையாலாகாத அரசைக் கொண்டு எந்த பிரயோசணமும் இல்லை.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் முடிவெடுப்பது எங்களது தனிப்பட்ட நிலைப்பாடு இதில் கட்சியோ அல்லது தலைவரோ தடுப்பதற்கு எதுவுமே இல்லை - என்றார்.
நன்றி - நிவுஸ் பிளஸ்.

