சவுதி அரேபியாவுக்கு உம்றா கடமையை நிறைவேற்ற பல்வேறு நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வருகை தருகின்றனர் இவ்வாறு உம்றா கடமையை நிறைவேற்ற உம்றா விசாவில் வரும் யாத்திரிகர்கள் சவுதியில் உள்ள ஜித்தா-மக்கள்-மதீனா போன்ற நகரங்களைத் தவிர வேறு எந்த நகரங்களுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தற்போது யாத்திரிகர்களுக்கான இக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு அவர்கள் தங்களது உம்றா விசா காலகட்டத்தில் சவுதியில் உள்ள ஏனைய நகரங்களுக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபிய அரசு அண்மைக்காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.