வட் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப்போல டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் வட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.