இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வில் முஸ்லிம் அல்லது தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் எந்த பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக பெண் அரசியல்வாதிகள் எவருக்கும் இந்த பட்டியலில் இடமளிக்கப்படவில்லை குறித்து சுட்டிக்காட்டப்படுகிறது.
முன்னதாக வியாழேந்திரன் – அங்கஜன் ,பைசர் முஸ்தபா ஆகியோருக்கு இராஜாங்க அல்லது பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படலாமென சொல்லப்பட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமல் ராஜபக்ஷ - பாதுகாப்பு.
வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் வசதிகள்.
காமினி லொக்குகோ - நகர அபிவிருத்தி.
மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி.
எஸ்.பீ. திஸாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி.
ஜோன் செனவிரத்ன - பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி.
மஹிந்த சமரசிங்க - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்
சீ.பீ. ரத்னாயக்க - புகையிரத சேவைகள்.
லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம்.
சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை.
சுசில் பிரேமஜயந்த் - சர்வதேச ஒத்துழைப்பு.
பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய - கல்விச் சேவைகள்.
மஹிந்தானந்த அலுத்கமகே - மின்சக்தி
துமிந்த திசாநாயக்க - இளைஞர் விவகாரம்.
ரோஹித்த அபேகுணவர்தன - மின்வலு.
தயாசிறி ஜயசேகர - கைத்தொழில்
லசந்த அழகியவண்ண - அரச முகாமைத்துவ கணக்கீடு.
கெஹெலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு மேம்பாடு.
அருந்திக பெர்ணான்டோ - சுற்றுலா மேம்பாடு.
திலங்க சுமதிபால - தொழில்நுட்ப புத்தாக்கம்.
மொஹான் பிரியதர்ஷன - மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்.
விஜித பெருகொட - மகளிர், சிறுவர் அலுவல்கள்.
ஜானக்க வக்கும்பர - ஏற்றுமதி கமத்தொழில்.
விதுர விக்ரமநாயக்க - கமத்தொழில்.
ஷெஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள், கடன் திட்டங்கள்.
கனக ஹேரத் - துறைமுக அபிவிருத்தி அலுவல்கள்.
திலும் அமுனுகம - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம்
லொஹான் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி.
விமலவீர திசாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள்.
ஜயந்த சமரவீர - சுற்றாடல்
சனத் நிஷாந்த பெரேரா - கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி
தாரக பாலசூரிய - சமூக பாதுகாப்பு.
புதிய பிரதி அமைச்சர்களின் விபரம்,
நிமல் லன்சா - சமுதாய வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு
காஞ்சன விஜயசேகர - கடற்தொழில் மற்றும் நீரக வளமூலங்கள்
இந்திக அனுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.