Ads Area

பாடசாலை நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும்! கல்வியமைச்சர்.

பாடசாலைகளில் விளையாட்டு போட்டியை தவிர ஏனைய நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

ரதம்பல ஸ்ரீசுமங்கல வித்தியாலயத்திற்கு அண்மையில் கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில்,

பாடசாலைகளில் விளையாட்டு வைபவம் தவிர வேறு எந்த வைபவங்களும் 1 மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும். இதற்காக புதிய கல்வி கொள்கைக்கு அமைவான சுற்றறிக்கை முன்னெடுக்கப்படும். தற்பொழுது பாடசாலைகளின் வகுப்பறைகள் 19ஆம் நூற்றாண்டுக்கு ஒத்ததாக அமைந்துள்ளன.


20ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்கள் 21ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கின்றனர். அரசாங்க பாடசாலைகளில் 60,000 ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களுள் 15,000 ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe