சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டினரின் இகாமாவில் குறுாFப் (Huroob) இருந்தால் அவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு மீண்டும் நுழைய முடியாது என சவுதி அரேபியாவின் ஜவசாத் (Jawazat) அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறுாFப் (Huroob) என்பது சவுதியில் வேலை செய்யும் ஒருவர் தான் வேலை செய்யும் எஜமானிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ அவர்களுக்குத் தெரியாமல், அவர்களுக்கு அறிவிக்காமல் வேறு ஒருவரிடம் அல்லது நிறுவனத்திடம் வேலை செய்தால் உடனே குறித்த அந்த எஜமான் அல்லது நிறுவனம் உரியவர் மீது முறைப்பாடு செய்வார்கள் அதனையெ குறுாFப் (Huroob) என்று சொல்வதுண்டு உரியவரிடம் இருந்து விலகினாலே குறிப்பிட்ட காலத்திற்குல் இக்காவில் குறுாFப் (Huroob) வந்துவிடும்.
அதே போல், இவ்வாறு குறுாFப் (Huroob) செய்யப்பட்டோருக்கு யாராவது வேலை வாய்ப்புக் கொடுத்தாலோ, அவர்களை தங்களது றுாமில் தங்க வைத்தாலோ, வாகனங்களில் ஏற்றிச் சென்றாலோ அவர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் சவுதி அரேபியாவின் ஜவசாத் (Jawazat) அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆகவே...சவுதியில் வேலை செய்யும் இலங்கை-இந்தியா உறவுகளே நீங்கள் நாட்டில் இருந்து வேலைக்கு வந்த நிறுவனத்திடமோ அல்லது கபீலிடமோ இருந்து விலக வேறு ஒரு இடத்தில் வேலை செய்பவர்களாக இருந்தீர்களானால் உடனடிய ஜவசாத் (Jawazat) அலுவலகத்தை அனுகி தண்டனைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
செய்தி மூலம் - http://saudigazette.com.sa
தமிழ் - மக்கள் நண்பன் அன்சார்