போக்குவரத்து விதிமீறல் (traffic violation) தண்டப்பணங்களை செலுத்தாதவர்கள் சவுதியிலிருந்து Final Exit செல்ல முடியாது, தண்டப்பணங்களை செலும் வரை விமானநிலையத்திலேயே தடுத்து வைக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதியில் வாகணம் ஓட்டுபவர்கள் ஏதாவது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு அதற்கான தண்டப்பணங்களை செலுத்தாமலிருந்தால் அவர்கள் உடனடியாக அவற்றை செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தாமல் அவர்களால் சவுதியிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும்.
இந்தப் புதிய சட்டம் இம்மாதம் 1ம் (நவம்பர்) திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.