கோத்தாபாயவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடையாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் ஆராய்வதற்கான அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
இவ்விடயம் குறித்து நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டால் மாத்திரமே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அவற்றில் குறிபிடப்பட்டிருப்பதைப் போன்று கோத்தபய ராஜபகஷவின் குடியுரிமை நீக்கப்படாவிட்டால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராந்துள்ளதான என்று வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
வீரகேசரி.