அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐ.தே. கட்சி பதவிகளிலிருந்தும் அமைச்சுப் பதவியிலிருந்தும் விலகல்.
தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது ட்விற்றர் கணக்கிலேயே இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மக்களின் ஆணையை மதித்து குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் பதவியில் இருக்கும் போது ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், தான் நல்லவற்றையே செய்துள்ளதாக நம்புவதாகவும், அதனை தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.