டெல்லியில் கட்டணம் செலுத்தி தூய்மையான காற்றை சுவாசிக்கும் ஒட்சிசன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் மோசமான காற்றின் தரக் குறியீட்டு புள்ளிவிவரங்களைக் கொண்ட எரிவாயு அறையாக மாறியுள்ளது.
இதனால் டெல்லியில் சுத்தமான காற்றை சுவாசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள கட்டணத்துடன் கூடிய ஒட்சிசன் நிலையத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
தெற்கு டெல்லியின் சொக்கெட் பகுதியில் உள்ள ஒட்சிசன் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் லெமன்கிராஸ், ஒரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூக்லிப்பிட்டஸ், லாவண்டர் உள்ளிட்ட 7 நறுமணங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதனோடு சேர்த்து ஒட்சிசனை சுவாசிக்கலாம். இதுபற்றி பேசிய ஒட்சிசன் நிலைய உரிமையாளர் அஜய் ஜான்சன், நாளொன்றுக்கு பத்து, பதினைந்து வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார்.