எம்.எஸ்.எம். றபீக்
காத்தான்குடி 6 மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு அருகாமையில் அமைந்துள்ள பொதுச்சந்தையில் எனக்கு இன்று நடந்த சம்பவம் இனிமேல் யாருக்கும் நடக்கக்கூடாது ஏனெனில் அங்கு மீன் வெட்டி விற்கும் ஒரு சிலர் செய்யும் பித்தலாட்டம் தொடர்கதையாக நடக்கிறது அதேபோல் இன்னும் சிலருக்கும் நடந்துள்ளதை அறிந்துகொண்டேன்.
இன்று வழமைபோன்று வெட்டு மீன் கொடுவா அரைகிலோ 550 ரூபாய் என ஒருவர் விலை சொன்னார் 500 ரூபாய்க்கு தரமுடியுமா எனகேட்டவுடன் உடனே ஆம் என்று சொல்லி ஏற்கனவே வெட்டிவைத்த மீனில் இருந்து அரை கிலோ நிறுத்துத் தந்தார் அவர் தரும்போதே சிறு சந்தேகம்தான் ஏனெனில் முழு மீனில் இருந்து வெட்டி தரவில்லை மாறாக வெட்டி இருந்த மீனையே கொடுவா மீன் என பொய்சொல்லி தந்துள்ளார். வீட்டில் கொண்டுவந்து சமைத்த போதுதான் விளங்கியது அது கொடுவா மீன் இல்லை வேறு மீன் என்று இவ்வாறு ஏமாற்றி பிழைப்பு நடத்தும் நீங்களெல்லாம் எவ்வாறு அல்லாஹ்விடம் தப்பப்போகிறீர்கள்.
எனவே சகோதரர்களே இனியாவது இவ்வாறான ஆசாமிகளிடமிருந்து ஏமாற வேண்டாம் இவர்கள் பொய்சொல்லி ஏமாற்றி உழைத்தால் எவ்வாறு இவர்களுடைய வியாபாரம் முன்னேரப்போகிறது இவர்களுடைய தொழிலில் எங்கே பறகத் இருக்கப்போகிறது.
ஆகவே மீன் வெட்டி விற்கும் ஒரு சில வியாபாரிகளிடத்தில் அவதானமாக இருங்கள் ஏற்கனவே வெட்டிய மீனை வேண்ட வேண்டாம் நாம் காசை கொடுத்து என்னைப்போல் நீங்களும் ஏமாறவேண்டாம்.
ஒரு சில கேடுகெட்ட மீன் வியாபாரிகளால் நேர்மையான முறையில் வியாபாரம் செய்யும் மீன் வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர் வந்து விடுகிறது, இனியாவது இவ்வாறான மீன் வியாபாரிகள் பித்தலாட்டங்கள் இல்லாது இறைவனுக்குப் பயந்து தொழில் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.