என்ன நடக்கிறது நம் நாட்டில் ; இரண்டு பிள்ளைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தாய்.
குருணாகலில் இரண்டு பிள்ளைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் 10 வயதுடைய இரண்டு பிள்ளைகளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “நேற்று முன்தினம் தாயார் தன்னையும் தனது தம்பியையும் கடுமையாக தாக்கினார். நாங்கள் உறங்கிய பின்னர் அதிகாலை 4 மணியளவில் தாயார் எங்களை எழுப்பி காட்டுப் பக்கம் அழைத்து சென்று கயிற்றினால் கழுத்தை நெரிக்க முயற்சித்தார். தாம் தாயின் கையில் அடித்து விட்டு காட்டுக்குள் சென்று மறைத்துக் கொண்டதாக, மூத்த மகன் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதனால், பிள்ளைகளை சரியாக வளர்ப்பதற்கு தண்டனை வழங்கும் வகையில் காட்டிற்கு அழைத்து சென்றதாக சந்தேக நபரான தாயார் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் மனைவி வேறு தொடர்பில் இருந்துள்ளார். இதனால் பிள்ளைகள் மீது கடும் கோபத்தில் இருந்த தாய் இந்த செயலை செய்ய முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.