பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வெளிநாடு செல்ல தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் இதனை ஆராய்ந்த நீதிபதி நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.