Ads Area

கல்வி பொது சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி ஆரம்பம்.

கல்வி பொது சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சையை முன்னிட்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் புஜித்த தெரிவித்துள்ளார். 

அதன்படி, 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. 554 இணைப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இரத்மலானை, தங்காலை, மாத்தறை. சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மாறகம அபேக்ஷா வைத்தியசாலை, வடரெக சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 


இம்முறை பரீட்சைக்கு 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகள் தோற்றவுள்ளர். தனியார் பரிட்சாத்திகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 ஆகும். மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு ஆகும். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe