(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிங்கள சான்றிதழ் பாடநெறியைத் தொடருகின்ற மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரியும் உதவிப் பணிப்பாளருமான லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சிங்களப் பாடத்திற்கான விரிவுரையாளர் நாஸிக் அஹமத், ஆங்கில பாடத்திற்கான விரிவுரையாளர் நௌஷாத் மற்றும் சியாம், அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சாஜித், பாடநெறிக்கான இணைப்பாளர் நிஸார், ஒருங்கமைப்பாளர் ஜெஸ்மீர் மற்றும் பலரும் இணைந்து கொண்டு அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.