சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்கு வருவோருக்கு தொழில் முறைத் தேர்வு நடாத்த அந்நாட்டு அரசு முடிவு.
இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வேலை தேடி வருவோருக்கு தொழில்முறை தேர்வு நடத்த சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வேலை தேடி வருவோருக்கு தொழில்முறை தேர்வு நடத்த சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தொழிலாளர் விசா என்ற பிரிவை ரத்து செய்யவும் சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதனால் அனுபவமற்ற தொழிலாளர்களை நீக்கி தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என சவுதி அரசாங்கம் நம்புகிறது.
முதலில் சோதனை முறையிலும் பின்னர் படிப்படியாக இதை கட்டாயமாக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தரப்பு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மொத்தம் 7.18 மில்லியன் வெளிநாட்டவர்கள் உள்ளனர். இதில் 3.1 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு போதிய தொழில்முறை ஆவணங்கல் இல்லை என கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவின் இந்த தொழில்முறை தேர்வானது இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, எகிப்து, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் என தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் பணியாற்றும் தொழிலாளர்களில் 95 விழுக்காடும் இந்த 7 நாடுகளில் இருந்து வந்தவர்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலாளர்களுக்கு எதிர்வரும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். 2020 மே மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுக்கும் ஜூலை மாதம் இலங்கை, இந்தோனேசியா மற்றும் எகிப்தியர்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு 2021 டிச,ம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுகளுக்கு உள்ளூர் பணத்தில் 400 முதல் 500 ரியால் வரை ஈடாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.