சவுதியில் சுற்றுலாவுக்கான கதவுகள் திறக்கப்பட்ட 33 நாட்களில் 77069 விசாக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியா ஏற்படுத்திய அதிரடி மாற்றங்களில் ஒன்று இது வரை காலமும் மூடப்பட்டிருந்த சவுதிக்கான வெளிநாட்டினரின் சுற்றுலாக் கதவு அண்மையில் திறந்து வைக்கப்பட்டு, வெளிநாட்டினர் சுற்றுலா வருவதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சுற்றுலாவுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள 33 நாட்களுக்குல் 77069 விசாக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 28190 பேர் வரை இதுவரை சவுதி அரேபியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சுற்றுலா விசாவில் வருகை தந்தோரில் சீனா, அமெரிக்கா, மலேசியா, பிரான்ஸ், கனடா, கசகஸ்தான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.